கலச விளக்கு பூஜை
ADDED :4465 days ago
சோழவந்தான் : சோழவந்தான் முதலியார்கோட்டை ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில், உலகநன்மைக்காக, கலசவிளக்கு பூஜை நடந்தது.தலைவர் ராஜேஸ்வரி துவக்கினார். மஞ்சுளா கொடி ஏற்றினார். நிறுவனத் தலைவர் சவுந்திரியம்மாள் தலைமை வகித்தார். இணைச்செயலாளர் பாஸ்கரன், பாலாஜி அன்னதானம் வழங்கினர். மாவட்ட இணைச்செயலாளர் சடாச்சரப்பாண்டி, சொற்பொழிவு நிகழ்த்தினார். பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.