உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவா – விஷ்ணு கோவிலில் உறியடி திருவிழா

சிவா – விஷ்ணு கோவிலில் உறியடி திருவிழா

திருவள்ளூர் : கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, சிவா விஷ்ணு கோவிலில், சிறுவர், சிறுமியர்களுக்கான உறியடி திருவிழா நடைபெற்றது. திருவள்ளூர் அடுத்த, காக்களூர், பூங்கா நகரில் உள்ள சிவா – விஷ்ணு கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, உறியடி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. 10 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர், உறியடி திருவிழாவில், உற்சாகமாக பங்கேற்றனர். முன்னதாக, ராதா, ருக்மணி உடனுறை வேணுகோபால சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !