மதுரை கருக்குவேல் ஐயனார், கருப்பர் ஆலய மஹா கும்பாபிஷேகம்!
விக்கிரமங்கலம், வி. வைத்தான் கிராமத்தில் குலதெய்வமாக போற்றப்படும் கருக்குவேல் ஐயனார் ஆலயத்தை புதுப்பித்தும் ஆலயத்திற்கென கோபுரத்துடன் கூடிய ஆலயம் அமைத்தும், பரிவார தெய்வங்களாகிய ஸ்ரீ கருப்பருக்கு புதிய விக்ரகம் அமைத்தும், ஆலயம் முழுமைபெறும் பொருட்டு ஸ்ரீ விநாயகப்பெருமான் திருமேனி, சப்தகன்னி போன்ற அனைத்து தெய்வங்களுக்கும் அழகுற சன்னதிகள் அமைக்கப்பட்டு மேற்படி ஆலயத்தின் திருக்குடமுழுக்கு விழாவானது நிகழும் மங்களகரமான ஆவணி மாதம் 16-ஆம் நாள் (1.9.13) ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதியும். புனர்பூச நட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 6.30 மணிக்கு மேல் 8.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் ஆலயத்தின் கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழாவானது நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி நிரல்
நிகழும் விஜய வருஷம் ஆவணி மாதம் 14-ந் நாள் (30.8.13) வெள்ளிக்கிழமை:
காலை 9.00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாஜனம்.
காலை 10.00 மணிக்கு ஸ்ரீமஹா கணபதி ஹோமம், ஸ்ரீ நவக்கிரஹ ஹோமம், ஸ்ரீ லெட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, தீர்த்தம் எடுத்தல்.
மாலை 5.00 மணிக்கு ம்ருத்சங்கிரஹணம், அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம்.
மாலை 6.00 மணிக்கு கும்பாலங்காரம், கடஸ்தாபனம், முதற்கால யாக பூஜைகள், இரவு 9.00 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனை
ஆவணி 15-ந் தேதி (31.8.13) சனிக்கிழமை:
காலை 8.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், சோமகும்ப பூஜை, கோ பூஜை, இரண்டாம் கால யாக பூஜைகள்.
காலை 10.00 மணிக்கு புதிய விக்ரங்களுக்கு அஷ்டாதசகிரியைகள், கண்திறப்பு, அஷ்டபந்தனம் சாற்றுதல், எந்திர பூர்ணாஹூதி, தீபாராதனை
மதியம் 12.00 மணிக்கு இரண்டாம் கால பூர்ணாஹூதி, தீபாரதனை,
மாலை 5.30 மணிக்கு புண்ணியாகவாஜனம், மூன்றாம் கால யாக பூஜைகள்
இரவு 8.30 மணிக்கு ஆசீர்வதனம், கணபதி தானம், உபசார வழிபாடுகள், தீபாரதனை, பிரசாதம்
ஆவணி 16-ந் தேதி (1.9.13) ஞாயிற்றுக்கிழமை:
அதிகாலை 4.00 மணிக்கு புண்ணியாகவாஜனம், நான்காம் கால பூஜைகள்
அதிகாலை 4.30 மணிக்கு நாடி சந்தானம், ஸ்பர்ஸாஹூதி, தொடர்ந்து மூலமந்திர ஹோமங்கள்
காலை 6.00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, உபசார தீபாராதனைகள்
காலை 6.30 மணிக்கு யாத்திராதானம், கடம்புறப்பாடு
காலை 7.00 மணிக்கு விமான கும்பாபிஷேகம்
காலை 7.30 மணிக்கு சகல தெய்வங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம்
காலை8.00 மணிக்கு தீபாராதனை, பிரசாதம், யஜமானார் உற்சவம்
கும்பாபிஷேக சர்வசாதகம்: சிவஸ்ரீ எஸ். கிருத்திகைவாச குருக்கள்