சேவா பாரதியில் கிருஷ்ண ஜெயந்தி
ADDED :4465 days ago
அன்னூர்: சேவா பாரதி சார்பில், அன்னூர், மன்னீஸ்வரர் கோவில் மண்டபத்தில், கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. சேவா பாரதி நிர்வாகி ராஜேந்திரன் வரவேற்றார். காரே கவுண்டன்பாளையம் ஊராட்சி தலைவர் சாந்தி, குத்துவிளக்கேற்றினார். சித்தர் துரைசாமி தலைமை வகித்தார். மாநில செயலாளர் பாலசுப்ரமணியன் பேசுகையில், ""மகா பாரதம், பகவத் கீதை, கிருஷ்ணர் அவதாரம் ஆகியவற்றை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும், என்றார். பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தின் குரு சிவாத்மா பேசுகையில்,"ஆசை, கோபம், வெறுப்பு இல்லாமல் இருக்கும்போது, மனதில் கிருஷ்ணரை உணர முடியும். நாம் இந்த சமுதாயத்திற்கு எதை கொடுக்கிறோமோ, அதுதான் நமக்கு திரும்ப கிடைக்கும் என்றார். விழாவில் அன்னூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சிறுவர், சிறுமியர் கிருஷ்ணர், கோபிகையர் வேடம் அணிந்து பாடல் பாடினர்.