பின்னல்வாடி கோவில் மகா கும்பாபிஷேகம்
ADDED :4418 days ago
உளுந்தூர்பேட்டை: பின்னல்வாடியில் விநாயகர், பாலமுருகன், ரேணுகா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி 31ம் தேதி காலை 8 மணிக்கு மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், மாலை 5 மணிக்கு முதற்கால யாக சாலை பூஜை, இரவு 8 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், இரவு 10 மணிக்கு முதற்கால பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. நேற்று காலை 5.30 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை, கோ பூஜை, லட்சுமி பூஜையும், காலை 7.45 மணிக்கு இரண் டாம் கால பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. காலை 8.30 மணிக்கு ரேணுகா பரமேஸ்வரி மாரியம்மன் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காலை 9 மணிக்கு பாலமுருகன் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.