உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காவாங்­கொ­ளத்தூர் பெருமாள் கோவில் கும்­பா­பி­ஷேகம்

காவாங்­கொ­ளத்தூர் பெருமாள் கோவில் கும்­பா­பி­ஷேகம்

பேரம்­பாக்கம்: காவாங்­கொ­ளத்தூர் சீனி­வாச பெருமாள் கோவிலில், நேற்று, மகா கும்­பா­பி­ஷேகம் நடந்­தது. கடம்­பத்தூர் ஒன்­றி­யத்­துக்கு உட்­பட்­டது காவாங்­கொ­ளத்தூர் கிராமம். இங்கு, 100 ஆண்­டுகள் பழமை வாய்ந்த, ராதா ருக்­மணி சமேத கிருஷ்ணர் சீனி­வாச பெருமாள் கோவிலை புன­ர­மைத்து, புதிய கோவில் கட்டி, மகா கும்­பா­பி­ஷேக விழா, நேற்று, நடந்­தது. முன்­ன­தாக, சனிக்­கி­ழமை காலை 10:00 மணிக்கு, விமான கலசம் மற்றும் புதிய படம் கரிக்கோல் ஊர்­வலம் நடந்­தது. மாலை 5:00 மணிக்கு, பகவத் பிரார்த்­த­னையும், திவ்ய பிர­பந்த பாரா­யணம் கும்ப ஸ்தாப­னமும், ஆரா­தனை பூஜை­களும், கலச அபி­ஷே­கமும், வாஸ்து சாந்தி பூஜையும் நடந்­தன. நேற்று காலை 5:30 மணிக்கு, விஸ்­வ­ரூப தரி­சன கோ பூஜையும், கும்ப பூஜை­களும் நடந்­தன. காலை 8:30 மணி­ய­ளவில், விமான பிர­திஷ்­டையும், மகா கும்­பா­பி­ஷே­கமும் நடந்­தன. இரவு, சுவாமி திரு­வீதி உலா நிகழ்ச்­சியும் நடந்­தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !