உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமி விவேகானந்தர் அரங்கம் திறப்பு விழா

சுவாமி விவேகானந்தர் அரங்கம் திறப்பு விழா

சூலூர்: முத்துக்கவுண்டன்புதூரில் "சுவாமி விவேகானந்தர் அரங்கம் நேற்று திறக்கப்பட்டது. சூலூர் அடுத்த முத்துக்கவுண்டன்புதூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், கட்டப்பட்ட சுவாமி விவேகானந்தர் பண்பு பயிற்சி அரங்கத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. இயக்க நிர்வாகி சோமசுந்தரம் வரவேற்றார். தலைவர் சம்பத்குமார் பேசுகையில்,"விவேகானந்தரின் போதனைகளை மாணவ, மாணவிகளுக்கு போதிக்கும் வகையில் பண்பு பயிற்சி முகாம்கள் இங்கு நடத்தப்படும் என்றார். திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா தலைவர் ராமசாமி அரங்கத்தை திறந்து வைத்தார். பள்ளபாளையம் ராமகிருஷ்ண ஆசிரம சுவாமி கேசவானந்த மகராஜ் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். கோவை விவேகானந்தா கேந்திர பொறுப்பாளர் பேராசிரியர் கனகசபாபதி, சூலூர் ஒன்றிய தலைவர் பாலசுந்தரம், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !