உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 13ம் நூற்றாண்டு.. மாசிலாநாதர் கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

13ம் நூற்றாண்டு.. மாசிலாநாதர் கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் 13ம் நூற்றாண்டில் குலசேகர பாண்டிய மன்னனால் அமைக்கப்பட்ட அறம்வளர்த்த நாயகி சமேத மாசி லாமணிநாதர் கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இந்த கோவில் கடல் அரிப் பினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தமிழக அரசு ரூ1 கோடியே 15 லட்சம் நிதி ஒதுக்கி கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டன. பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற் று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை 9 மணிக்கு யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்ப ட்டு 10:20 மணிக்குகோபுரகலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பூம்புகார் எம்.எல்.ஏ. பவுன்ராஜ் உள்ளிட்ட ஏராளமாக பக் தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !