திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
சொரக்காய்பேட்டை: திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. பள்ளிப்பட்டு அடுத்த, சொரக்காய்பேட்டை கிராமத்தில் உள்ள, திரவுபதி அம்மன் கோவிலில், இந்தாண்டு, ஆவணி மாதம், தீமிதி திருவிழா, கடந்த மாதம், 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று செவ்வாய்க்கிழமை இரவு, 7:00 மணிக்கு, அம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ச்சியாக, வெள்ளிக்கிழமை அர்ஜூனன் தபசு, இறுதி நாளான, 9ம் தேதி காலை பீமன் படுகளத்தில், துரியோதனனை வதம் செய்யும் நிகழ்ச்சி, தெருக்கூத்து கலைஞர்களால் நடத்தப்படும். அன்று இரவு, 7:00 மணிக்கு தீமிதி நிகழ்ச்சியும் நடைபெறும்.விழாவை முன்னிட்டு தினமும் பகல், 2:00 மணியளவில் மகாபாரத சொற்பொழிவு மற்றும் இரவு, 10:00 மணியளவில் தெருக்கூத்து நிகழ்ச்சியும் நடைபெறும்.