நெல்லிக்குப்பம் கோவிலில் ஆடி திருவிழா நிறைவு
ADDED :4416 days ago
திருப்போரூர்: வேண்டவராசி அம்மன் கோவிலில், ஏழு வார ஆடித்திருவிழா சிறப்பு பூஜைகளுடன் நிறைவடைந்தது. நெல்லிக்குப்பம் வேண்டவராசி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஆடிமாதம், ஏழு வார விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு விழா கடந்த ஜூலை மாதம் துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. விழாவை முன்னிட்டு, வாரந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஊரணி பொங்கல் வைத்தல் நடந்தது. ஒரு வாரம் சமுதாய விழாவாகவும், இரண்டாம் வாரம் பெருவிழாவும் நடத்தப்பட்டது. நிறைவு நாளில், மூலவர் வேண்டவராசி அம்மன் வெள்ளி கவசத்திலும், உற்சவர் சிறப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்தனர். அம்மன் புகழ் தமிழ் நாமாவளி அர்ச்சனையும் நடந்தது.