பரமேஸ்வரர் கோவிலில் நாமாவளிகள் உச்சரிப்பு
                              ADDED :4440 days ago 
                            
                          
                          
திருப்போரூர்: தண்டலம், விகித பரமேஸ்வரர் கோவிலில், பிரதோஷ விழா நடந்தது. திருப்போரூர் அடுத்த, தண்டலத்தில் விகித பரமேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, மாதம் இருமுறை, பிரதோஷ விழா கொண்டாடப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை, பிரதோஷ விழா நடந்தது. சவுந்திரநாயகி உடனுைற விகித பரமேஸ்வரர், ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அபிஷேகத்தின் போது, சிவ நாமாவளிகள் உச்சரித்தனர். திருப்போரூர் பிரணவமலை கைலாசநாதர் கோவில், தையூர் செங்கண்மாலீஸ்வரர் கோவில், காட்டூர் வைத்தியநாத ஈஸ்வரர் கோவில் ஆகியவற்றிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.