உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தர மகாலிங்கேஸ்வர சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை

சுந்தர மகாலிங்கேஸ்வர சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை

திருநெல்வேலி: பாளை. சுந்தர மகாலிங்கேஸ்வரர் சுவாமி கோயிலில் நாளை (5ம் தேதி) சிறப்பு பூஜை நடக்கிறது. பாளை. முருகன்குறிச்சி அருகே சுந்தர மகாலிங்கேஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் நாளை (5ம் தேதி) அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடக்கிறது. காலையில் சுவாமி, ஆனந்தவல்லி தாயார், அகஸ்தியர், விநாயகர், முருகர், நவக்கிரகங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடக்கிறது. சிறப்பு பூஜையை தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !