உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழ­வேத்­தம்மன் கோவிலில் தேர் திரு­விழா கோலா­கலம்

பழ­வேத்­தம்மன் கோவிலில் தேர் திரு­விழா கோலா­கலம்

லத்தூர்:லத்தூர் பழ­வேத்­தம்மன் கோவிலில், தேர் திருவிழா சிறப்­பாக நடை­பெற்­றது. லத்தூர் கிரா­மத்தில் உள்ள பழ­வேத்­தம்மன் கோவிலில், தேர் திரு­விழா, கடந்த மாதம் 27ம் தேதி, காப்பு கட்­டு­த­லுடன் துவங்­கி­யது. அதை தொடர்ந்து, நேற்று முன்­தினம், காலை 11:00 மணிக்கு, அம்­ம­னுக்கு சிறப்பு அபி­ஷே­கமும், மாலை 6:00 மணிக்கு, வரிசை எடுத்தல், திருக்­கல்­யாணம், அன்­ன­தானம் ஆகி­ய­வையும், இரவு 10:00 மணிக்கு, தேர் வீதி­யு­லாவும் நடை­பெற்­றது. நேற்று, 12:00 மணிக்கு, அம்மன் கோவி­லுக்கு வந்த­டையும் நிகழ்ச்­சியும், அதை தொடர்ந்து, ஊரணி பொங்கல் வைத்து வழி­பாடும் நடை­பெற்­றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !