உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 3 லட்சம் ரூபாய் நோட்­டுகள் ஏலேல விநா­ய­க­ருக்கு தோரணம்

3 லட்சம் ரூபாய் நோட்­டுகள் ஏலேல விநா­ய­க­ருக்கு தோரணம்

காஞ்­சி­புரம்: காஞ்­சி­பு­ரத்தில், ஏலேல சிங்க விநா­ய­க­ருக்கு, 3 லட்சம் ரூபாய் நோட்­டு­களை தோர­ண­மாகக் கட்டி, பக்­தர்கள் விழா எடுத்­தனர். காஞ்­சி­புரம், காமாட்சி­அம்மன் கோவில் சன்­னிதி தெருவில் உள்­ளது, ஏலேல சிங்க விநா­யகர் கோவில். காமாட்­சி­ யம்மன் கோவி­லுக்கு செல்லும் பக்­தர்கள், இந்த விநா­ய­கரை தரி­சித்து செல்வர்.இங்கு, ஆண்­டு­தோறும் சதுர்த்தி விழா, சிறப்­பாக நடத்­தப்­ப­டு­கி­றது.வித்­யா­ச­மாக விழா நடத்த வேண்டும் என்­ப­தற்­காக, விநா­ய­க­ருக்கு சந்­தன காப்பு அலங்­காரம் செய்து, ரூபாய் நோட்­டு ­களை தோர­ண­மாகக் கட்டி, வழி­பட துவங்­கினர். இதற்கு, பக்­தர்­களிடம் பணம் பெற்று, விழா முடிந்த உடன், பணத்தை திருப்பிக் கொடுத்து விடு­கின்­றனர்.சதுர்த்­தி­யை­யொட்டி நேற்று, ரூபாய் நோட்டு தோரண அலங்­கா­ரத்தில், விநா­யகர் நேற்று அருள்­பா­லித்தார். மாலை வரை, அலங்­கா­ரத்தை கலைக்­க­வில்லை.கோவில் குருக்கள், ரமேஷ் கூறு­கையில், கடந்த ஆண்டு, 2.5 லட்சம் ரூபாய் நோட்­டு­களை தோர­ண­மாக கட்­டினோம். இந்த ஆண்டு, 3 லட்சம் ரூபாய் நோட்­டு­களை தோர­ண­மாக கட்டி, அலங்­க­ரித்து உள்ளோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !