உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்­தணி முக்கண் விநா­யகர் கோவில் கும்­பா­பி­ஷேகம்

திருத்­தணி முக்கண் விநா­யகர் கோவில் கும்­பா­பி­ஷேகம்

திருத்­தணி: முக்கண் விநா­யகர் கோவில் கும்­பா­பி­ஷேகம் நேற்று நடந்­தது. இதில், திர­ளான பக்­தர்கள் வழி­பட்­டனர்.திருத்­தணி அரக்­கோணம் சாலையில், முக்கண் விநா­யகர் கோவில் உள்­ளது. இக்­கோவில், நகர பொது­மக்கள் மற்றும் சுற்­றுலா ஓட்­டு­னர்கள் மற்றும் உரி­மை­யா­ளர்கள் ஆகியோர், 10 லட்சம் ரூபாய் மதிப்­பீட்டில், திருப்­ப­ணிகள் நடத்­தப்­பட்­டன.தொடர்ந்து, கோவிலின் கும்­பா­பி­ஷேக விழா, கடந்த, 7ம் தேதி காலை, கண­பதி ஹோமத்­துடன் துவங்­கி­யது.இதற்­காக, கோவில் அருகில், இரண்டு யாக ­சா­லைகள் மற்றும், 108 கல­சங்கள் வைத்து, நவக்­கி­ரக ஹோமம், லட்­சுமி ஹோமம் மற்றும் முதல் கால பூஜை நடந்­தது. நேற்று முன்­தினம், மாலை, வாஸ்து சாஸ்தி ரக­÷ஷா­கன ஹோமம், ரக்­ச­பந்­தனம் மற்றும் கும்­பா­லங்­காரம் நடந்­தது. நேற்று, காலை, 7:00 மணிக்கு அவ­பி­ரத யாக­சாலை பூஜை, யாத்­ரா­தானம் நடந்­தது. காலை, 9:35 மணிக்கு கல­சங்கள் ஊர்­வ­ல­மாக புறப்­பட்டு, புதி­ய­தாக அமைக்­கப்­பட்ட விமா­னத்தின் மீது கலச நீர் ஊற்றி கும்­பா­பி­ஷேகம் நடத்­தப்­பட்­டது. பின்னர், கலச நீரை அங்கு கூடி­யி­ருந்த பக்­தர்கள் மீது தெளித்­தனர். காலை, 10:00 மணிக்கு சிறப்பு அபி­ஷேகம், அலங்­காரம் மற்றும் தீபா­ரா­தனை நடந்­தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !