விநாயகர் சிலைகளை கண்காணிக்க இளைஞர்கள் சிறப்பு குழு
ADDED :4407 days ago
சென்னை: மணலியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிரமாண்ட விநாயகர் சிலைகளை, 24 மணிநேரமும் கண்காணிக்க, இளைஞர்கள் அடங்கிய சிறப்பு குழுவை மணலி போலீசார் அமைத்துள்ளனர். மணலி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட, 16 இடங்களில் ஆறு அடி முதல் ஒன்பது அடி வரை விநாயகர் சிலைகள், நேற்று முன்தினம் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அவற்றை கடலில் கரைக்கும் வரை பாதுகாப்பு அளிக்கவும், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையிலும், அந்தந்த பகுதி இளைஞர்கள் ஐந்து பேர் அடங்கிய சிறப்புக்காணிப்பு குழுக்களை மணலி போலீசார் அமைத்துள்ளனர். இந்த குழுக்களுக்கு, சிலைகள் அருகே அறிமுகம் இல்லாத நபர்கள் நடமாட்டம்; வீண் பிரச்னை ஏற்படுவதை தடுக்க, உடனுக்குடன் தகவல் பரிமாற்றம் அளிக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.