வேப்பமரத்தில் பால் பக்தர்கள் பரவசம்
ADDED :4463 days ago
மேட்டூர்: கொளத்தூர் அடுத்த பூதப்பாடியில் இளம் வேப்பமரத்தில் இருந்து பால் வடிந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேட்டூர் தாலுகா, கொளத்தூர் அடுத்த பண்ணவாடி-பூதப்பாடி ரோட்டோரம் சிவாஜி என்பவரது தோட்டம் உள்ளது. தோட்டத்தில் உள்ள இளம் வேப்பமரத்தின் கிளையில் இருந்து கடந்த இரு நாட்களாக தொடர்ந்து பால் வடிந்தது. இதுகுறித்து தகவல் சுற்றுப்பகுதியில் பரவியதை தொடர்ந்து, பண்ணவாடி, பூதப்பாடி, புதுவேலமங்கலம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் பால் வடியும் வேப்பமரத்தை பார்த்து பரவசம் அடைந்தனர்.