உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஷீரடி சாய்­பாபா கோவிலில் பாலா­பி­ஷேகம்

ஷீரடி சாய்­பாபா கோவிலில் பாலா­பி­ஷேகம்

திருத்­தணி: திருத்­தணி அடுத்த, கே.ஜி.கண்­டிகை, சாய்­ந­கரில் அமைந்­துள்ள ஷீரடி சாய்­பாபா கோவிலில், நேற்று பாலா­பி­ஷேக உற்­சவ விழா நடந்­தது. விழா­வை­யொட்டி, அதி­காலை, 5:00 மணிக்கு சுப்­ர­பாதம், 5:15 மணிக்கு காகட ஆரத்தி நடந்­தது. காலை, 8:00 மணி முதல், மதியம், 12:00 மணி வரை, பாலா­பி­ஷேகம் நடந்­தது. இதில், பக்­தர்கள் நீண்ட வரி­சையில் காத்­தி­ருந்து மூல­வ­ருக்கு பாலா­பி­ஷேகம் செய்து வழி­பட்­டனர். பின்னர் சிறப்பு அலங்­காரம், தீபா­ரா­தனை மற்றும் மதிய ஆரத்தி நடந்­தன. பக்­தர்­க­ளுக்கு அன்­ன­தானம் வழங்­கப்­பட்­டது. மாலை, 5:00 முதல், 6:00 மணி வரை, விஷ்ணு சஹஸ்­ர­நாம பாரா­யணம், சந்­தியா ஆரத்தி, இரவு, 8:00 மணிக்கு, சேஜ் ஆரதி நடந்­தன. முன்­ன­தாக, திருப்­பதி சொற்­பொ­ழி­வாளர் ஆர்.பி.என்., ஆன்­மிக சொற்­பொ­ழிவு நடந்­தது. இரவு, 8:00 மணி முதல், அதி­காலை வரை, ஓம்­சாயி, சாயி ஜெய ஜெய சாயி நாம சங்­கீர்த்­தனை பஜ­னைகள் நடை­பெற்­றன. இதில், 1,500க்கும் மேற்­பட்ட பக்­தர்கள் கலந்து கொண்டு வழி­பட்­டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !