உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெர்மன் தலைநகர் பெர்லின்.. மயூரபதி முருகன் ஆலய கும்பாபிஷேகம் கோலாகலம்!

ஜெர்மன் தலைநகர் பெர்லின்.. மயூரபதி முருகன் ஆலய கும்பாபிஷேகம் கோலாகலம்!

ஐரோப்பா கண்டத்தில் இந்து மதத்தினரால் 1991 ஆம் ஆண்டில் வழிபாட்டுக்காகவும் இந்து மக்களை ஒன்று கூட்ட நினைத்தும் தொடர் மாடி கட்டிடம் ஒரு பகுதியில் 9 பேர் கொண்ட குழுவினரால் அமைக்கப்பட்டு சிறிதாக பிரார்த்தனை ஸ்தலமாக ஸ்ரீ மயூரபதி முருகன் ஆலயம் தோன்றியது. நாளடைவில் தமிழ் மக்கள் திரண்டு பல ஆண்டுகள் முயற்சியில் 2009 ஆம் ஆண்டு ஜெர்மன் தலைநகர் பெர்லின் நகரில் ஆலயத்தின் மூல மூர்த்தியாக உள்ள ஸ்ரீ மயூரபதி முருகப்பெருமானையே நிர்வாக சபையின் தலைவராக நியமித்து ஜெர்மன் அரசாங்கத்தினரால் அங்கிகாரம் பெற்றது இவ்வாலயத்தின் சிறப்பாகும்.

ஆலயம் அமைக்க இந்தியாவில் இருந்து மகாபலிபுரம் சிற்பக்கலை வேந்தர் திரு. ரவி சங்கர் அவர்களின் குழுவினரால் ஆலயம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வேலைகள் படிப்படியாக சிற்ப சாஸ்திரப்படி நடந்து 2013 செப்டம்பர் மாதம் நான்காம் தேதி துவங்கி 5 நாட்கள் வெகு சிறப்பாக யாக பூஜைகள் நடந்து செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி மகாகும்பாபிஷேகம் இந்தியா தமிழ்நாட்டை சேர்ந்த பழனி சிவஸ்ரீ ஆ. சிவநேச சிவாசாரியார் தலைமையில் சிறப்பாக நடந்தது. ஆலயத்தில், சித்தி விநாயகர், மூலஸ்தான மூர்த்தியாக ஸ்ரீ வள்ளி தேவ சேனா சமேத மயூரபதி முருகன், விஸ்வநாதர், மகாவிஷ்ணு, நாக பூஷணி அம்பாள், நவக்ரகங்கள், பைரவர், சண்டிகேசர் சன்னதிகள் அமையப்பெற்றுள்ளன. கொடி மரமும் உள்ளது. ஆலயத்தில் ஆறுகால பூஜை நடைபெறுகிறது. ஆலயத்தில் தற்போது குருக்களாக இந்தியா தமிழ்நாடு சென்னையை சேர்ந்த சிவஸ்ரீ ப. சுப்ரமணிய சிவாச்சாரியார் பணியாற்றி வருகிறார். ஐரோப்பிய கண்டத்தில் மாபெரும் தமிழ் மக்களின் அடையாளமாகவும், உணர்வுகளின் எழுச்சியாகவும் வரும் பெயர் சொல்லும் அளவிலும் இக்கோயில் திகழும்.

Riesestrass 20, 12347 Berlin

Tel: 030-694 69 00

Opening time: 08:am to12:pm. and 3.30pm.to -08 pm


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !