தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் : தெப்ப உற்சவம் கோலாகலம்
தென்காசி :தென்காசி காசிவிசுவநாதர் கோயில் தெப்பகுளத்தில் செப் 13 தெப்ப திருவிழா கோலாகலமாக நடந்தது. தென்காசியில் மிகவும் புகழ்பெற்று விளங்கும் காசிவிசுவநாதர் கோயிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தில் தெப்ப திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு ஆவணி மாதம் மூல நட்சத்திரமான செப் 13, இரவு 7 மணியளவில் தென்காசி தெப்பகுளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. தெப்பத்தில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மையப்பர் தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை மண்டபத்தை வலம் வந்தது. அதனை தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு ரிஷப வாகனத்தில் வீதி உலா நடந்தது. நிகழ்ச்சியில் செயல் அலுவலர் கணபதி முருகன் மற்றும் கோயில் பணியாளர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர் சமீம், கவுன்சிலர்கள் முஸ்தபா, சண்முகசுந்தரம், சங்கரசுப்பிரமணியன், கருப்பசாமி தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்காசி ஏ.எஸ்.பி., அரவிந்தன் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.