உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியக்காண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பெரியக்காண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

குளித்தலை: தோகைமலை அருகே பெரியபனையூர் பெரியக்காண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கரூர் மாவட்டம், தோகைமலை யூனியன் நெய்தலூர் பஞ்சாயத்து பெரியபனையூர் உள்ள பெரியக்காண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் காவிரி ஆற்றில் புனித நீர் எடுத்து வரப்பட்டு, விக்னேஸ்வர பூஜை, கடஸ்தாபனம், கும்ப அலங்காரம், கோபுரகலசம் வைத்தல், மருந்து சாத்துதல் உள்பட, பல்வேறு யாகசாலை பூஜைகள் நடந்தது.  பிஜ்யாத்ர தானம் கடம் புறப்பாடு நடந்தது. அப்போது கருடன் வானத்தில் பறந்த போது, பக்கதர்கள் பக்தி பரவசத்துடன் கோஷங்கள் எழுப்பினர். அதைத்தொடர்ந்து ராஜகோபுரம், மூலஸ்தானத்து புனித நீர் ஊற்றப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை ராச்சாண்டார் திருமலை மலைக்கோவில் கந்த சுப்பிரமணிய சிவாச்சாரியார் நடத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !