ஆழ்வார்குறிச்சி வெங்கடேச பெருமாள் கோயிலில் கருட சேவை
ADDED :4437 days ago
ஆழ்வார்குறிச்சி : ஆழ்வார்குறிச்சியில் வெங்கடேசபெருமாள் கோயிலில் கருடசேவை நடந்தது. ஆழ்வார்குறிச்சியில் கீழகிராமத்தில் உள்ள வெங்கடேசபெருமாள் கோயிலில் பெருமாள், சீதா, பூமாதேவி, ஆஞ்சநேயர், கருடபகவான், நரசிம்மர் உட்பட பரிவார மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். இக்கோயிலில் நடந்த கருடசேவை விழாவில் கட்டளைதாரர்கள் முத்தையாஐயர், அபுதாபி வெங்கடாசலம்ஐயர், ரமேஷ், றஉஷா ஆகியோர் முன்னிலையில் கும்பஜெபம், வேதபாராயணம், சிறப்பு அபிஷேகம் ஆகியன நடந்தது. மாலையில் சகஸ்கரநாம அர்ச்சனை, சாயரட்சை, சிறப்பு தீபாராதனை, தொடர்ந்து பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளலும் நடந்தது.