ஓணம் கொண்டாட்டம் கல்பாக்கத்தில் கோலாகலம்
ADDED :4514 days ago
கல்பாக்கம்:கல்பாக்கம் நகரியத்தில், ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கேரளாவை சேர்ந்த ஏராளமானோர், கல்பாக்கம் அணுசக்தி வளாகத்தில் பணிபுரிகின்றனர். இங்குள்ள கல்பாக்கம் மற்றும் அணுபுரம் ஆகிய நகரியங்களில் வசிக்கின்றனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கல்பாக்கம் மலையாள சாம்சாரிகா வேதி அமைப்பு சார்பில், நெஸ்கோ வளாகத்தில், கோலாகல விழா நடந்தது. விழாவில், ஓணம் பண்டிகை குறித்து, இளைய தலைமுறையினர் அறியும் வகையில் விளக்கினர். அத்தப்பூ கோலமிட்டும், கலைநிகழ்ச்சிகள், சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு போட்டிகள் நடத்தியும், இவ்விழாவை கொண்டாடினர். தலைவர் சோமராஜ், செயலர் சந்தோஷ், விழா ஒருங்கிணைப்பாளர் அனில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.