பவித்ர உற்சவம் கொண்டாட்டம்
ADDED :4440 days ago
சேலம்: சேலம் சவுந்திரவல்லி, சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், பவித்ர உற்சவம் கொண்டாடப்பட்டது. சேலம் அம்மாப்பேட்டையில், சவுந்திரவல்லி, சவுந்திரராஜ பெருமாள் கோவில் உள்ளது. கோவிலில், பவித்ர உற்சவத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 5 மணிக்கு உதய கால கருட சேவை மற்றும் பெருமாள் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. காலை, 10 மணிக்கு ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பகல், 12 மணிக்கு மஹாபூர்ண ஆஹூதி, சாற்று முறை, பவித்ர விசர்ஜனம் செய்து, பக்தர்களுக்கு தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டது. உற்சவத்தை முன்னிட்டு, சவுந்தரராஜ பெருமாள் மூலவருக்கும், சவுந்தரவல்லி தாயார் மூலவருக்கும் தங்க கவசம் சாத்தப்பட்டது. திரளான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி சென்றனர்.