உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சர்வ மங்களம் உண்டாக்கும் உமா மகேஸ்வர விரதம்!

சர்வ மங்களம் உண்டாக்கும் உமா மகேஸ்வர விரதம்!

குடும்ப ஒற்றுமை மற்றும் சர்வ மங்களங்களும் உண்டாக்கும் உமா மகேஸ்வர விரதம் இன்று. திருக்கைலையில்  பொன்னும் மணியும் சேர்ந்து அமைந்த ஆசனத்தில் சிவபெருமான் தமது தேவியுடன் எழுந்தருளியுள்ளார். சிவபெருமானே உலக உயிர்கள் அனைத்திற்கும்  தந்தையாவார். அதுபோல உமாதேவியே உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்குமே  அன்னையாக விளங்குபவள். அவர் தன்னுடைய  இறைவனாகிய  சிவபெருமானின் என்னப்படியே  அனைத்துச்  செயல்களையும்  செய்து வருகின்றார்.  பூவிலிருந்து மணத்தையும், நெருப்பிலிருந்து  புகையையும் எப்படி பிரிக்க முடியாதோ  அதுபோல் இவர் சிவத்திடம்  ஐக்கியமானவராவர். கருணையே வடிவான இவர்  ஐவகை செயல்களுக்காய் ஐவகை பேதங்களாக மாறியுள்ளார்.  முறையே

1. பராசக்தி- இவர் பரமசிவத்திலிருந்து 1001 கூறு கொண்டவர்.
2. ஆதிசக்தி - பராசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
3. இச்சா சக்தி - ஆதிசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
4. ஞானசக்தி - இச்சா சக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
5. கிரியாசக்தி - ஞானசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.

இதில் பராசக்தி பக்குவமடைந்த  ஆன்மாக்களை அனுக்கிரகிக்கிறவள். ஆதிசக்தி நம்மிடமுள்ள ஆணவங்களைப் போக்கி பக்குவ நிலையைக் கொசடுப்பவர். ஞானசக்தி ஞானத்தை ஊட்டி நம்மிடம் ஞானத்தை ஒளிரும் படி செய்பவர். இச்சா சக்தி  திருஷ்டித் தொழில் செய்து நம்மை  சிருஷ்டிப்பவர்.  கிரியாசக்தி  உலகப் படைப்பை செய்பவர்.  மேற்க்கண்ட  இந்த  ஐந்து சக்திகளும்  ஒன்றினைந்து  ஒரு செயல்  செய்யும் போது  ஒன்றாகி  சதாசிவமூர்த்தியாகி  விடுகின்றது.  எனவே  சிவன் - சக்தி பிரிக்க முடியாத  ஒன்று. இத்தகைய   சிறப்பு வாய்ந்த   உமா மகேஸ்வர மூர்த்தியை  நாம் தரிசிக்க வேண்டிய தலம் கும்பகோணம் அருகேயுள்ள  கோனேரி ராஜபுரம் தான் செல்ல வேண்டும். இங்கு கோயில் கொண்ட மூர்த்தியே  உமாமகேஸ்வரர் ஆவார்.  இறைவி பெயர்  தேகசௌந்தரி என்பதாகும். இங்குள்ள தீர்த்தத்தில்  நீராடி இறைவி, இறைவனுக்கு  இளநீர், பால், தேன் அபிசேகம் செய்ய  கடுமையான  குஷ்ட நோயும் தீரும். இத்தல இறைவனின்  மற்றொரு திருநாமம்       பூமிநாதர்  என்பதாகும்.  பெயர்க்கேற்றார் போல் எந்த ஒரு தொழில் செய்யும் முன்பும்  இந்த பூமிநாதரை வணங்கி  இங்கிருந்து ஒரு பிடி மண் கொண்டு வந்து தொழில் செய்யும் இடத்தில் வைத்தால்  தொழில்  சிறப்படையும்.  புதன் தோறும்  சிவப்பு அல்லிப்பூவால் அர்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும் செய்து வழிபட்டால் குடும்ப வாழ்வில் எந்தவொரு பிரச்சனையும் வராது. இருந்தாலும் விலகும்.இங்குள்ள மண்ணால் வினாயகர் செய்து நம் வீட்டில் வைத்து வழிபட எந்தவொரு காரியத்தடையும்  அகலும்.

உமா மகேஸ்வர ஸ்தோத்திரம்

சர்வ மங்களங்களும் உண்டாக

இந்த மந்திரங்களைப் படிப்பதால் சர்வ மங்களங்களும், எல்லா நன்மைகளும் கிடைப்பதுடன் எல்லா தீமைகளும் விலகும். கால காலனைத் துதிப்பதால் யம பயம்
விலகி நீண்ட ஆயுளும் கிடைக்கும்.

நம: சிவாப்யாம் நவயௌநாப்யாம்
பரஸ்பராச்லிஷ்ட வபுர்தராப்யாம்
நகேந்த்ர கந்யா வ்ருஷகேதநாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீட் பாம்

நம: சிவாப்யாம் ஸரஸோத்ஸவாப்யாம்
நமஸ்க்ருதாபீஷ்ட வர ப்ரதாப்யாம்
நாராயணே நார்சித பாதுகாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் வ்ருஷ வாஹநாப்யாம்
விரிஞ்சி விஷ்ண்வித்த்ர ஸுபூஜிதாப்யாம்
விபூதி பாடீர விலேநாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் ஜகதீஸ்வராப்யாம்
ஜகத்பதிப்யாம் ஜய விக்ரஹாப்யாம்
ஜம்பாரி முக்யைரபிவந்திதாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் பரமௌஷதாப்யாம்
பஞ்சாக்ஷரீ பஞ்ஜர ரஞ்ஜிதாப்யாம்
ப்ரபஞ்ச ஸ்ருஷ்டிஸ்திதி ஸம்ஹ்ருதிப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாமதி ஸுந்தராப்யா
மத்யந்த மாஸக்த ஹ்ருதம் புஜாப்யாம்
அசேஷலோகைக ஹிதங்கராப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் கலிநாச நாப்யாம்
கங்காள கல்யாண வபுர்தராப்யாம்
கைலாஸ சைலஸ்தித தேவதாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யா மசுபாபஹரப்யாம்
அசேஷலோகைக விசேஷிதாப்யாம்
அகுண்டிதாப்யாம் ஸம்ருதி ஸம்ப்ருதாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யா ரதவா ஹநாப்யாம
ரவீந்து வைஸ்வாநர லோசநாப்யாம்
ராகா சசாங்காப முகாம் புஜாம்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் ஜடிலந்தராப்யாம்
ஜராம்ருதிப்யாம்ச விவர்ஜிதாப்யாம்
ஜநார்தநாப் ஜோத்பவ பூஜிதாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் விஷமேக்ஷணாப்யாம்
பில்வச் சதர மல்லிக தாமப்ருத்ப்யாம்
சோபாவதீ சாந்தவதீச்வராப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் பசுபாலகாப்யாம்
ஜகத்த்ரயீ ரக்ஷண பத்த ஹ்ருத்ப்யாம்
ஸமஸ்த தேவாஸுர பூஜி தாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

ஸ்தோத்ரம் த்ரிஸந்த்யம் சிவபார்வதீயம்
பக்த்யா படேத் த்வாதசகம் நரோய
ஸ ஸர்வ ஸெளபாக்யபலானி: புங்க்தே
சதாயுரந்தே சிவலோகமேதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !