உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேணுகோபாலசுவாமி கோவிலில் உறியடி உற்சவம்

வேணுகோபாலசுவாமி கோவிலில் உறியடி உற்சவம்

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி திருவேங்கட மூர்த்தி வேணுகோபாலசுவாமி கோவிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு உறியடி உற்சவம் நடந்தது. கடந்த மாதம் 28 ம் தேதி கோகுலாஷ்டமி திருவிழா நடந்தது. அதையொட்டி நடந்த உறியடி உற்சவத்தில் வேணுகோபாலசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில் பெருமாள் கோவில் வீதியில் உறியடி உற்சவம் நடந்தது. இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று உறியடித்து பரிசுகளை வென்றனர். திருவேங்கட மூர்த்தி ஆண்டாள், அலமேலுவுடன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை யாதவ மகாசபை பிரமுகர்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !