உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். செப் 21, அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருமஞ்சனமும், அலங்கார சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி ஸ்ரீனிவாச பெருமாள் ஆண்டாள் கோயிலிலிருந்து புறப்பட்டு திருவண்ணாமலை அடிவாரம் மண்டபத்திற்கு எழுந்தருளினார். மாலை 3 மணிக்கு கருட வாகனத்தில் சீனிவாச பெருமாள் கிரிவலம் வருதல் நடந்தது. பக்தர்கள் நீண்ட கியூவில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். திருநெல்வேலி, கோவிலபட்டி பகுதிகளிலிருந்து அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்திருந்தனர். சிவகாசி, ராஜபாளையம், மதுரை, திருநெல்வேலி, ஆகிய ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !