அய்யனார்-பகவதி அம்மன் கோயில் சுமங்கலி பூஜை
ADDED :4394 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அத்தியூத்து கிராமத்தில் உதிரமுடைய அய்யனார்-பகவதி அம்மன் கோயில் மாதாந்திர சுமங்கலி பூஜை நடந்தது. பின், உலக நன்மைக்காக சிறப்பு பூஜை நடந்தது. சுப்புத்தேவன் வலசை, ஆண்டித்தேவன் வலசை, ரெகுநாதபுரம், வைரவனேந்தல், பொன்குளம், இளமனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நிர்வாக தலைவர் கருணாநிதி, செயலர் மணிகண்டன் செய்திருந்தனர்.