உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனோன்மணியம்மன்கோவில் தேர்த் திருவிழா

மனோன்மணியம்மன்கோவில் தேர்த் திருவிழா

புதுச்சேரி:மனோன்மணி மாரியம்மன் கோவிலின் தேர்த் திருவிழா நேற்று நடந்தது.புதுச்சேரி, கேண்டீன் வீதியில் அமைந்துள்ள மனோன்மணி மாரியம்மன் கோவிலின், மூன்றாம் ஆண்டு மகோற்சவ விழா, கடந்த 15ம் தேதியன்று, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. இரண்டாம் நாளான, 16ம் தேதியன்று, லலிதா மூலமந்திர பூஜை, ஹோமம், கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. விழாவை முன்னிட்டு, தினமும் காலையில் அம்மனுக்கு மகா அபிஷேகமும், மாலையில் அம்மன் வீதியுலாவும் நடந்து வருகிறது.முக்கிய விழாவான, தேர்த் திருவிழா நேற்று காலை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !