பஜனை பாடல்களுடன் கருட வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா!
ADDED :4390 days ago
ஊத்துக்கோட்டை: பஜனை பாடல்களுடன் சீனிவாச பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புரட்டாசி மாதம் பிறந்தாலே பெருமாள் கோவில்கள் விழாக்கோலம் பூண்டு வடும். நேற்று முன்தினம் இரண்டாவது சனிக்கிழமையை ஒட்டி, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, பிராமணத்தெருவில் உள்ள ஸ்ரீசீனிவாச பெருமாள் பஜனை கோவிலில், காலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு சீனிவாச பெருமாள் படம் அலங்கரிக்கப்பட்டு, கருட வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக வலம் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக ஊத்துக்கோட்டை அடுத்த தாசுகுப்பம், கண்டிகை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பஜனை குழுக்களின் ஆடல், பாடல்களுடன் சென்றனர்.