உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜபெருமாள் கோவிலில் சுவாமி ஆடைகள் ஏலம்!

வரதராஜபெருமாள் கோவிலில் சுவாமி ஆடைகள் ஏலம்!

காஞ்சிபரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ஆடைகள் ஏலம் விடப்பட்டது. வரதராஜ பெருமாள் கோவிலில், சுவாமிகளுக்கு, பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய வேஷ்டி, துண்டு, பட்டு புடவை, பட்டு பாவாடை ஆகியவற்றை ஆண்டு தோறும் ஏலம் விடுவது வழக்கம்.இந்த ஆண்டு, ஏலம் நேற்று முன்தினம் துவங்கியது. ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, திங்கள் கிழமைகளில் ஏலம் நடக்கிறது. முதல் நாள் நடந்த ஏலத்தில், 2.12 லட்சம் ரூபாய்க்கு, ஆடைகள் ஏலத்தில் விற்கப்பட்டன. இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் கூறுகையில், கடந்த ஆண்டு, ஏல விற்பனை மூலம், 7. 95 லட்சம் ரூபாய் கிடைத்தது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !