சிங்கவரம் கோவிலில் மாணவர்கள் சேவை
ADDED :4392 days ago
செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் செஞ்சி கிருஷ்ணா ஐ.டி.ஐ., மாணவர்களின் என்.எஸ்.எஸ்., முகாம் நடந்தது.செஞ்சி கிருஷ்ணா ஐ.டி.ஐ., மாணவர்களின் என்.எஸ்.எஸ்., முகாம் சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நடந்தது. கோவில் படிகளை தூய்மை செய்தனர். பஸ் நிறுத்தத்தில் இருந்து கோவில் வரை மரக்கன்றுகளை நட்டனர்.முகாமை இன்ஸ்பெக்டர் நந்தகோபால் துவக்கி வைத்தார். திரையரங்க உரிமையாளர் ஆனந்தராஜ், ஊராட்சி தலைவர் ஏழுமலை முன்னிலை வகித்தனர். ஐ.டி.ஐ., நிர்வாகி சரவணன் வரவேற்றார். ஆசிரியர்கள் காமராஜ், செந்தமிழ் கலந்து கொண்டனர். ஆசிரியர் இளையராஜா நன்றி கூறினார்.