உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி காமாட்சி கோவிலில் நவராத்திரி உற்சவம் 4ம் தேதி துவக்கம்!

காஞ்சி காமாட்சி கோவிலில் நவராத்திரி உற்சவம் 4ம் தேதி துவக்கம்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், விஜய வருஷத்திய ஸ்ரீ சாரத நவராத்திரி மஹோத்ஸவம் அக். 4 ம் தேதி துவங்கப்பட உள்ளது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் நவராத்திரி உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு நவராத்திரி உற்சவம் அக் 4 ம் தேதி துவங்குகிறது. இங்கு நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, அக் 3 ம்தேதி அனுக்ஞை, சண்டி ஹோமம், அங்குரார்ப்பணம், ரஷாபந்தனம், ஆகிய நிகழ்ச்சியும், இரவு மிருத்ஸங்கிரஹணம், வாஸ்து சாந்தி ஆகிய நிகழ்ச்சிகளுடன் நவராத்திரி உற்சவம் துவங்க உள்ளது. இரவு 7:30 மணிக்கு இன்னிசை மற்றும் இதர கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நிறைவு நாளான அக்.13ம் தேதி  காலை தீர்த்தவாரி உற்சவமும், இரவு தங்கரதம் புறப்பாடும் நடைபெற உள்ளது. 14ம் தேதி மாலை 6:30 மணிக்கு, ஸஹஸ்ர ஸ்வர்ண கலசஸ்தாபனம், ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம ஹோமமும், 15ம் தேதி காலை 7:00 மணிக்கு ஸஹஸ்ர ஸ்வர்ண கலசாபிஷேகம், ஸ்ரீஅம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது. நவராத்திரி உற்சவத்திற்கான ஏற்பாடுகளை கோவில் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் தேவஸ்தான ஆதீன பரம்பரை ஸ்தலத்தார், ஸ்தானீகர்கள் செ#து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !