ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை படிக்கட்டுகளில் ரப்பர் கிரிப் மேட்!
ADDED :4386 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பாசி படர்ந்த படிக்கட்டுகளில், பக்தர்கள் வழுக்கி விழுவதை தவிர்க்க, ரப்பர் கிரிப் மேட் பொருத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடுகின்றனர். கடற்கரையில் உள்ள படிக்கட்டில் பாசி படிந்ததால், பக்தர்கள் பலர் வழுக்கி விழுந்து, காயமடைந்தனர். இதை தவிர்க்க, ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம், 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயில், படிக்கட்டுகளில் ரப்பர் கிரிப் மேட் அமைத்துள்ளனர். கடல்நீரிலும் சேதமாகாத இந்த மேட்டில், பக்தர்கள் சிரமம் இன்றி நடந்து, நீராடி செல்கின்றனர்.