மேலத்திருவேங்கடநாதபுரம் கோயிலில் கருடசேவை
ADDED :4388 days ago
திருநெல்வேலி: மேலத்திருவேங்கடநாதபுரம் பெருமாள் கோயிலில் நாளை 3வது வார கருட சேவை நடக்கிறது. மேலத்திருவேங்கடநாதபுரம் பெருமாள் கோயிலில் நாளை(5ம் தேதி) மூன்றாம் சனிக்கிழமை கருட சேவை நடக்கிறது. மாலை 6 மணிக்கு சுந்தர மூர்த்தி குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. 8 மணிக்கு திருச்சி கல்யாண ராமனின் ஆன்மிக சொற்பொழிவுகள், இரவு 10.30 மணிக்கு சுப்பையா நடத்தும் பாரதி கலைமன்றத்தின் பக்தி கச்சேரியும் நடக்கிறது. நள்ளிரவு மூலவர் தென்திருவேங்கடமுடையான் அலங்காரத்தில் கருடசேவை சிறப்பாக நடக்கிறது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள். ஏற்பாடுகளை செயல் அலுவலர் மற்றும் விழாக்கமிட்டியினர் செய்துள்ளனர்.