உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சப்த கன்னியர் கோவில் மண்டல அபிஷேகம்

சப்த கன்னியர் கோவில் மண்டல அபிஷேகம்

மதுராந்தகம்: சப்த கன்னியம்மன் கோவில், 48வது நிறைவு நாள் மண்டல அபிஷேகம் கோலாகலமாக நடந்தது.மதுராந்தகம் அடுத்த, மருக்கம்பாக்கம் கிராமத்தில், புதிதாக கட்டப்பட்ட சப்த கன்னியர் கோவில் உள்ளது. இங்கு, கடந்த மாதம், 19ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, இங்குள்ள அம்மனுக்கு சிறப்பு மண்டல அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. 48வது நிறைவு நாளான நேற்று, காலை 7:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதை தொடர்ந்து இரவு 7:00 மணி அளவில், சப்த கன்னியர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !