சாய்பாபா கோவிலில் நவராத்திரி கொலு!
ADDED :4483 days ago
உடுமலை: உடுமலை தில்லை நகர் ஆனந்த சாய்பாபா கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, கொலு மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. கோவிலில், நவராத்திரி விழா கடந்த 5 ம் தேதி துவங்கியது. வளாகத்தில், கொலு அமைக்கப்பட்டு, நாள்தோறும் காலை 6.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வரும் 14 ம் தேதி கோவிலில், சாய்நாதர் மகானின் 95 ம் ஆண்டு மகாசமாதி விழா நடக்கிறது. அன்று, பகல் 1.30 மணிக்கு நாம சங்கீர்த்தனம் துவங்குகிறது. மாலை 5.30 மணி முதல் சிறப்பு அலங்கார பூஜை, ஆர்த்தி நடைபெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை சீரடி ஆனந்தசாயி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.