ஸ்ரீபெரும்புதூர் நவராத்திரி உற்சவம்
ADDED :4468 days ago
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர், ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், எதிராஜ நாதவல்லி தாயார் நவராத்திரி உற்சவத்தில் சர்வபூபாலன் வாகனத்தில் எழுந்தருளினார். முதல் நாள் உற்சவத்தில் கஜலட்சுமி வாகனத்தில் அம்பாள் எழுந்தருளினார். இரண்டாம் நாள் உற்சவத்தில் சர்வபூபாலன் வாகனத்தில் எழுந்தருளினார்.கோவில் வளாகத்தில் பக்தி பாடல்களும், இன்னிசை கச்சேரியும், நடந்தன. மாலை 3:00 மணிக்கு திருமஞ்சனமும், மாலை 6:30 மணிக்கு, கோவில் வளாகத்தில் உள்புறப்பாடும், இரவு, 8:௦௦ மணிக்கு ஊஞ்சல் சேவையும் நடந்தது.இன்று கிளி வாகனத்தில் புறப்பாடு நடைபெறும்.