ஆலங்குளம் பத்திரகாளியம்மன் கோயில் கொடை விழா
ADDED :4412 days ago
ஆலங்குளம்: ஆலங்குளம் பத்திரகாளியம்மன் கோயில் கொடை விழா கடந்த சனிக்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை நடக்கிறது. சனிகிழமை காலை வருஷாபிஷேகம், புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை 1503 திருவிளக்கு பூஜை, அன்னதானம், இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. செவ்வாய்கிழமை 1008 குடம் மஞ்சள் நீர் அபிஷேகம், மதியம் சிறப்பு பூஜை, இரவு 207 முளைப்பாரி எடுத்து வருதல், நள்ளிரவு 1 மணிக்கு அலங்கார சப்பரத்தில் அம்மன் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. புதன்கிழமை மதியம் சிறப்பு பூஜையோடு விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தர்மகர்தா டி.ஆர்.டி. ராஜன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.