உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவ­ராத்­திரி விழா: பத்­மா­ச­னத்தில் காஞ்சி காமாட்சி அம்மன்!

நவ­ராத்­திரி விழா: பத்­மா­ச­னத்தில் காஞ்சி காமாட்சி அம்மன்!

காஞ்­சி­புரம்: நவ­ராத்­திரி உற்­ச­வத்தில் காஞ்சி காமாட்சி அம்மன் பத்­மா­ச­னத்தில் பக்­தர்­க­ளுக்கு அருள்­பா­லித்தார். கடந்த வெள்­ளி­கி­ழமை நவ­ராத்­திரி விழா துவங்­கி­யது. நேற்று முன்­தினம் காலையில் நவா­வர்ண பூஜையும், மதியம் இரண்டு மணிக்கு கன்­னிகா பூஜையும் நடந்­தது. மாலையில் காமாட்சி அம்மன் மலர்­களால் அலங்­க­ரிக்­கப்­பட்டு, மூலவர் கோலத்தில் பத்­மா­ச­னத்தில் அமர்ந்து, இடது பக்கம் லட்­சு­மியும், வலது பக்கம் சரஸ்­வ­தி­யுடன் கொலு மன்­ட­பத்­திற்கு இரவு 7.30 மணி­ய­ளவில் எழுந்­த­ரு­ளினார். அங்கு சூர­சம்­ஹாரம் முடிந்­தபின், உற்­சவர் மண்­ட­பத்­திற்கு திரும்­பினார். அதனை தொடர்ந்து இசை நிகழ்ச்சி நடந்­தது. காஞ்­சி­புரம் யதோத்­த­காரி கோவிலில் நடந்த நவ­ராத்­திரி விழாவில், கோம­ள­வல்லி தாயா­ருடன் பெருமாள் ஸ்ரீதேவி, பூதே­வி­ய­ருடன் கண்­ணாடி அறையில் பக்­தர்­க­ளுக்கு அருள்­பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !