உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முரளிகிருஷ்ணர் கோலத்தில் காஞ்சி அழகியசிங்கப்பெருமாள் தரிசனம்!

முரளிகிருஷ்ணர் கோலத்தில் காஞ்சி அழகியசிங்கப்பெருமாள் தரிசனம்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அழகிய சிங்கப்பெருமாள் கோவில் நவராத்திரி விழாவில் முரளிகிருஷ்ணர் கோலத்தில் பெருமாள் காட்சி தந்தார். 108 திவ்யதேச வைணவ கோவில்களில் அழகியசிங்கப்பெருமாள் ஸ்தலமும் ஒன்று. ஆண்டு தோறும் நடக்கும் ஒன்பது நாள் நவராத்திரி விழாவில் முதல் நாள் வேணுகோபால் கோலத்தில் காட்சியளித்தார். நேற்று முன்தினம் பெருமாள் பிறந்த நட்சத்திரமான சுவாதி நட்சத்திரம் அன்று சுவாமிக்கு காலை 6:00 மணிக்கு திருமஞ்சனமும்,  9:00 மணிக்கு சேவை சாற்று முறையும் நடந்தது.பெரியாழ்வாரும் அதே நட்சதிரத்தில் பிறந்த தினமாததால் பெருமாளுக்கு படைத்த நெய்வைத்தியம் ஆழ்வாருக்கு படைக்கப்பட்டு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !