மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
4350 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
4350 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
4350 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலில் ஒரு சமூகத்தினர் கொடி கட்டப்பட்டுள்ளதால் பக்தர்களிடம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காமாட்சியம்மன் கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள ஆதிகாமாட்சி என்று அழைக்ககூடிய ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில் உள்ளது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் உருவானதற்கு முன்பே இருந்த கோவில். ஒரு காலத்தில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினரால் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. பரம்பரை பரம்பரையாக அந்த சமூகத்தினர் மட்டுமே அறங்காவலராக நியமிக்கப்பட்டு வந்தனர். இந்து சமய அறநிலை துறை நிர்வாகத்தின் கீழ் வந்த பின்னர் கோவில் செயல் அலுவலர் அனுமதி பெற்று விழாக்களோ, வேறு விசேஷங்களோ நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன் அந்த சமூகத்தினர் விழா மற்றும் விளக்கு பூஜை நடத்துவதற்காக கோவில் உள் பிரகாரத்தில் கல்தூணில் வாழை கட்டி கொடியும் கட்டியுள்ளனர். தற்போது அனைத்து சமூகத்தினரும் வழிபடும் கோவிலாக உள்ளதால் குறிபிட்ட சமூகத்தினர் வழிபாட்டு தலத்தில் கொடி கட்டியதால் பக்தர்கள் மத்தியில்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பக்தர் சேகர் கூறுகையில் அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் ஒரு குறிபிட்ட சமூகத்தினர் கொடி கட்டி விழா கொண்டாடியதால் மற்ற சமூக பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்குகிறது. இதற்கு சம்மந்தபட்ட நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் கூறுகையில் பல ஆண்டுகளாக விஸ்வகர்மா சமூகத்தினரால் இக்கோவில் நிர்வாகம் இருந்து வந்தது. அறங்காவலராக அவர்கள் மட்டுமே இருக்க முடியும். இருப்பினும் எந்த விழா நடந்தாலும் செயல் அலுவலரிடம் அனுமதி பெறவேண்டும். கொடி கட்டிய விபரம் எனக்கு தெரியாது. அதை எடுத்து விட சொல்கிறேன் என்றார்.
4350 days ago
4350 days ago
4350 days ago