வள்ளியூர் சாமியார்பொத்தையில் நவராத்திரி தின விழா
ADDED :4391 days ago
வள்ளியூர்: வள்ளியூர் ஸ்ரீபுரம் சாமியார்பொத்தை முத்துகிருஷ்ணசுவாமி மிஷன் சார்பில் நவராத்திரி திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. வள்ளியூர் ஸ்ரீபுரம் முத்துகிருஷ்ணசுவாமி மிஷன் சார்பில் கடந்த 4ம் தேதி நவராத்திரி திருவிழா துவங்கியது. தினமும் காலையில் 10.30 மணிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடக்கிறது. மாலையில் கலை நிகழ்ச்சி, அதனை தொடர்ந்து பூஜ்யஸ்ரீ மாதாஜி வித்தம்மா பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அதன்படி நேற்று ஐந்தாம் நாளாக நடந்த நவராத்திரி திருவிழாவில் ரமணன் வழங்கிய குருவே இறைவன் என்ற சிறப்பு சொற்பொழிவு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஸ்ரீமுத்துகிருஷ்ணசுவாமி மிஷன் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.