செங்கோட்டை ஆதிபராசக்தி கோயிலில் அகண்ட ஜோதியேற்றம்
ADDED :4436 days ago
தென்காசி: செங்கோட்டை ஆதிபராசக்தி கோயிலில் நவராத்திரி அகண்ட ஜோதி ஏற்றும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. செங்கோட்டை ஆதிபராசக்தி கோயிலில் நவராத்திரி அகண்ட ஜோதி ஏற்றும் விழா சிறப்பாக நடந்தது. மேலும் நவராத்திரி விழாவை முன்னிட்டு பராசக்தி சிலையை புரதானமாக கொண்ட கொலு வைக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தினசரி இரவு 7.30 மணிக்கு ஆன்மிக மேடை நிகழ்ச்சிக்கு கோவை சக்தி ஜெயசீலன், திருப்பூர் சிவானந்தன், கடலூர் சுப்பிரமணியன், காஞ்சிபுரம் கந்தன், தஞ்சாவூர் சோமசுந்தரம், மேல்மருவத்தூர் பழனிமுருகன் நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் மோகன் உட்பட பலர் சிறப்புரையாற்றுகின்றனர். ஏற்பாடுகளை சக்தி பீட தலைவர் சங்கர நாராயணன் தலைமையில் சித்ரா, சங்கர் பழனியம்மாள், இந்திரா, விஜி, ரமேஷ், உட்பட பலர் செய்து வருகின்றனர்.