திருப்பதியின் முக்கிய கோயில்கள்!!
ADDED :4780 days ago
கீழ்திருப்பதியில் கோவிந்தராஜப்பெருமாள் கோயில் உள்ளது. இங்குள்ள பெருமாள், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் உள்ள திருச்சித்ரகூடத்தில் இருந்தார். சோழராஜா ஒருவரின் செயல் காரணமாக, கோவிந்தராஜரை இடம் மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. உடனடியாகப் பெருமாளை கீழ் திருப்பதிக்கு கொண்டு சென்று விட்டனர். அங்கு கோயில் அமைக்கப்பட்டது. இந்தக்கோயிலில் புண்டரீகவல்லித் தாயார், ஆண்டாள், ராமானுஜர் சந்நிதிகளும் உள்ளன. திருச்சானூரில் சீனிவாசரை மணந்த பத்மாவதிதாயார் கோயில் உள்ளது. இத்தலத்தை அலமேலுமங்காபுரம் என்றும் குறிப்பிடுவர். திருமலையில் இருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ளது. திருமலையின் மீதுள்ள ஆனந்தநிலையத்தில் சீனிவாச வெங்கடேசப் பெருமாள் கோயிலும், சுவாமி புஷ்கரணி தீர்த்தக்குளக் கரையில் சீனிவாசருக்கு இடம் கொடுத்த வராகப் பெருமாள் கோயிலும் உள்ளன.