மடப்புரம் கோயில் உண்டியலில் ரூ.10.35 லட்சம் வசூல்!
ADDED :4384 days ago
திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் காளிகோயில் உண்டியலில், பக்தர்கள் ரூ.10 லட்சம் வரை காணிக்கை செலுத்தினர். அறநிலையத்துறை உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி தலைமையில், உண்டியல் எண்ணும் பணி நடந்தது.பரமக்குடி உதவி கமிஷனர் ரோஜாலிசுமதா, இன்ஸ்பெக்டர் மாரியப்பன் பங்கேற்றனர். உண்டியலில், பக்தர்கள் காணிக்கையாக ரூ.10 லட்சத்து 35 ஆயிரத்து 971செலுத்தியிருந்தனர்.தங்கம் 211 கிராம், வெள்ளி 194 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 6 இருந்தது. உண்டியல் எண்ணும் பணியில், கோயில் ஊழியர்கள், மகளிர் குழுவினர் பங்கேற்றனர்.