உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி பிரம்மோற்சவம்: தங்கத்தேரில் சுவாமி பவனி!

திருப்பதி பிரம்மோற்சவம்: தங்கத்தேரில் சுவாமி பவனி!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின், ஆறாம் நாளான, நேற்று மாலை, ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, தங்கத் தேரில், பவனி வந்தார். நேற்று காலை, அனுமந்த வாகனத்தில், மலையப்ப சுவாமி, கோதண்டராமர் அலங்காரத்தில், நான்கு மாட வீதிகளை, வலம் வந்து, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மாலை, 5:00 மணிக்கு, தங்கத்தேர் பவனி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாக மலையப்ப சுவாமி எழுந்தருளினார். பின் பக்தர்கள் புடைசூழ, நான்கு மாட வீதிகளை வலம் வந்தார். இரவு யானை வாகன உற்சவம் நடந்தது. நேற்று முழுவதும், 63,000 பேர், ஏழுமலையானை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !