உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூரில் இரண்டு கோயில்களில் ஏழு கலசங்கள் திருட்டு

திருவள்ளூரில் இரண்டு கோயில்களில் ஏழு கலசங்கள் திருட்டு

திருவள்ளூர்  கோட்டை ஆறுமுக சுவாமி கோயிலில் உள்ள முருகன் சன்னதி, விஜயராகவ பெருமாள் சன்னதி, விநாயகர் சன்னதி, விஜயலட்சுமி தாயார் சன்னதி ஆகியவற்றில் பொருத்தப்பட்டிருந்த ஆறு கலசங்கள் மற்றும் மற்றொரு உபகோயிலான வீரட்டீஸ்வரர் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த ஒரு கலசம் ஆகியவற்றை வியாழனன்று இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இக் கோயில் திருத்தணி முருகன் கோயிலுக்குச் சொந்தமானது. கோயிலின் இணை ஆணையர் புகழேந்தி அளித்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடுவதுடன், திருடு போன கலசங்களின் மதிப்பு குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !