உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீநின்ற நாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்!

ஸ்ரீநின்ற நாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்!

திருப்புத்தூர்: திருப்புத்தூரில் உள்ள ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் கோயிலில், புரட்டாசி நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு, திருக்கல்யாண மகோத்ஸவம் நடந்தது. கோயிலில், அன்று காலை 7 மணிக்கு கோ பூஜையுடன் மகோத்ஸவ நிகழ்ச்சி துவங்கியது. புண்யா ஹவாசனம் ஹோமம் நடந்தது. சுவாமிக்கு திருமஞ்சனம், பூர்ணாகுதி , தீபாராதனைகள் நடந்தன. பக்தர்கள் மாலை 5 மணிக்கு, பூமாயி அம்மன் கோயிலில் இருந்து திருக்கல்யாணத்திற்காக சீர்வரிசை எடுத்து வந்தனர். ஸ்ரீதேவி, பூதேவியருடன் காட்சி தரும் ஸ்ரீநின்ற நாராயண பெருமாள் மாலை மாற்றுதல், ஊஞ்சல், கன்னிகாதானம், மாங்கல்யதானம் நிகழ்ச்சிள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சுவாமி வீதி உலா வந்தது. கோயில் பரம்பரை டிரஸ்டி ரங்கசாமிபிள்ளை - பார்வதி அம்மாள் குடும்பத்தினர் ஏற்பாட்டை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !