அக்கா சுவாமிகள் கோவிலில் நவராத்திரி இசை நிகழ்ச்சி
ADDED :4377 days ago
புதுச்சேரி: வைத்திக்குப்பம் அக்கா சுவாமிகள் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி இசை நிகழ்ச்சி நடந்தது. வைத்திக்குப்பம் அக்கா சுவாமிகள் கோவிலில் மனோன்மணி அம்மனுக்கு பதினெட்டாம் ஆண்டு நவராத்திரி சிறப்பு பூஜை மற்றும் ஊஞ்சல் உற்சவம் கடந்த 5ம் தேதி துவங்கியது. தினமும் காலை 8:00 மணி மற்றும் மாலை 6:30 மணிக்கு அபிஷேக ஆராதனை நடந்து வந்தது. நேற்று முன்தினம், விழாவின் ஒரு பகுதியாக வீணை இசை நிகழ்ச்சி நடந்தது. ரெவி, ஷியாமலா ரெவி வீணை இசைத்தனர். கலைமாமணி கோபக்குமார் மிருதங்கமும், விஸ்வேஸ்வரன் அருமுகனமும், பிரபாகரன் தபேலாவும், ஜீவா கெஞ்சிராவும் இசைத்தனர். வரும் 17ம் தேதி நடராஜர் அபிஷேகமும், 18ம் தேதி அன்னாபிஷேகமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை குரு அக்காசுவாமிகள் திருத்தொண்டு சபையினர் செய்திருந்தனர்.